கோவையை நோக்கி ஐ.டி., நிறுவனங்கள் படையெடுப்பு: பெரும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜன
2022
08:26
பதிவு செய்த நாள்
ஜன 24,2022 08:24


கோவை: தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) நிறுவனங்களின் கவனம் கோவை மீது திரும்பியுள்ளதால் முன்னணி நிறுவனங்கள் தங்கள் அலுவலக கட்டமைப்பை விரிவுபடுத்திவருவது, வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில், பல்வேறு துறைகளிலும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பரவலால் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தற்போது, 'டிஜிட்டல்' தேவையும் கூடியுள்ளது. பலரும் தங்களது வணிகத்தை 'டிஜிட்டல்' மயமாக்கி வருகின்றனர்.இவற்றை எல்லாம் பாதுகாக்க, 'சைபர் செக்யூரிட்டி'களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. சர்வதேச அளவில் ஐ.டி., நிறுவனங்கள் பெரும் அளவிலான ஒப்பந்தங்களை செய்துள்ளன. இதனால், ஊழியர்களின் தேவையானது பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

நிறுவனங்களும் திறனுள்ள ஊழியர்களை அதிகளவு சம்பளம் என பல சலு கைகளை கொடுத்து பணியமர்த்தி கொண்டு இருக்கின்றன. அதேநேரம் ஊழியர்கள் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் போக்கும் காணப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியில் 'டிஜிட்டல்' தேவையும் அதிகரித்து வருவதால் ஒப்பந்தங்கள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஐ.டி., நிறுவனங்கள் தங்களின் உள்கட்டமைப்புகளில் மாற்றங்களை சில இடங்களில் செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை கோவையில் நிறுவிவருகின்றன. இதனால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொழில் துறையினர் உள்ளனர்.

ஐ.டி., வல்லுனர்கள் கூறியதாவது:

கொரோனா மத்தியில் பல்வேறு ஐ.டி., நிறுவனங்கள், ஐ.டி., சார்ந்த நிறுவனங்கள் இரண்டாம் கட்ட நகரங்களில்(டயர்- 2) தங்கள் அலுவலகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளன. குறிப்பாக கொரோனா வருகைக்கு பின், ஐ.டி., நிறுவனங்களின் கவனம் தமிழகத்தில் கோவை பக்கம் திரும்பியுள்ளன. இதனால், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என பெரும் வளர்ச்சிக்காண உதவிகரமாக இருக்கும்.
ஏற்கனவே சென்னை வெள்ளத்துக்கு பின் பல நிறுவனங்கள் கோவையை அதன் முதல் தேர்வாக வைத்திருந்தன. முன்னணி ஐ.டி., நிறுவனம் ஒன்று கோவையில் புதிய அலுவலகத்தை நிறுவி வருகிறது. இது விரைவில் திறக்கப்படலாம். அதேபோன்று மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கோவையில் தனது அலுவலகத்தினை திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
25-ஜன-202201:25:23 IST Report Abuse
RandharGuy ஸ்டாலின் முயற்சியால் ஐ.டி., நிறுவனங்களின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளன. இதனால், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என பெரும் வளர்ச்சிக்காண உதவிகரமாக இருக்கும்.....வாழ்க தளபதி ......விடியலை நோக்கி தமிழ்நாடு ...நூறுநாளில் சாதனை.......
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
25-ஜன-202200:18:02 IST Report Abuse
Sai ஓசூர் அசுரர் வளர்ச்சி கொண்டதனால் பயன் பெங்களுரு கன்னடர்களுக்குத்தான் காலையில் வந்து மாலையில் வீடு திரும்ப அனைத்து வசதிகளையும் செய்து கொண்டுள்ளனர் கோவை வளர்ந்தால் பாலக்காடு பிராமணர்கள் மட்டுமல்ல கேரளக் காரர்களுக்கே முழு பலனும் போய்சேரும் என்பது காலங்காலமாக கண்ட உண்மை இதே கதைதான் கன்னியாகுமரிக்கும் இதில் அரசியல் ஏதுமில்லை அவரவர் திறமை சூழ்ச்சி தங்கள் மாநில சுற்று சூழலை கெடுத்துக் கொள்ளாமலே தங்களை வள படுத்தி கொள்ளும் தந்திரம்
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
24-ஜன-202219:50:13 IST Report Abuse
Sai எத்தனையோ பூதாகார வளர்ச்சிகள் புஸ்வாணமாகிப் போன சரித்திரம் NIIT APTECH உண்டு மாற்றம் ஒன்றே நிரந்தரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X