பெருந்துறை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பெருந்துறை பேரூராட்சி யில், 15 வார்டுகளில், எட்டு வார்டுகள் பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம்: பொது பிரிவினருக்கு ஆறு வார்டு, பெண்களுக்கு ஏழு வார்டு, ஆதி திராவிடர் பெண்களுக்கு ஒரு வார்டு, ஒரு வார்டு ஆதி திராவிடர் பொதுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறுவரையறைக்கு பின் வார்டு ஒதுக்கீடு விபரம்: 1வது வார்டு பொது, 2வது வார்டு பெண் (பொது), 3வது வார்டு பொது, 4வது வார்டு பொது, 5வது வார்டு பெண் (பொது), 6வது வார்டு பொது, 7வது வார்டு பெண் (பொது), 8வது வார்டு ஆதி திராவிடர் (பொது), 9வது வார்டு பெண் (பொது), 10வது வார்டு பொது, 11வது வார்டு பெண் (பொது), 12வது வார்டு பெண் (பொது), 13வது வார்டு ஆதி திராவிடர் (பெண்), 14வது வார்டு பொது, 15வது வார்டு பெண் (பொது). மொத்தம், 17 ஆயிரத்து, 838 வாக்காளர்கள். இதில் ஆண்கள், 8,660 பேர்; பெண்கள், 9,178 உள்ளனர். பெருந்துறை பேரூராட்சியில் ஆண்களை விட பெண்கள், 518 பேர் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஓட்டளிக்க, 24 வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது.