பந்தலுார்:நீலகிரி மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகளில் பணியாற்றும் வெளிமாநில கால்நடை டாக்டர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டதையடுத்து, மாநில எல்லையில் உள்ள, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில், கால்நடை டாக்டர்கள் இல்லாத நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து, வாரம்தோறும் சுழற்சிமுறையில் டாக்டர்கள், ஆய்வாளர்கள், கால்நடை உதவியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் ஊட்டியில் இருந்து எல்லை சோதனை சாவடி பகுதிக்கு வருவதற்கு, கடந்த காலங்களில், வாகன வசதி அளிக்கப்பட்டது. தற்போது, அந்த வசதி நிறுத்தப்பட்டதால், கூடுதல் வாடகை செலுத்தி, தனியார் வாகனத்தில் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்காத நிலையில், மிகவும் சிரமப்படுகின்றனர்.
மண்டல இணை இயக்குனர் சிவகிருஷ்ணன்(பொ) கூறுகையில்,''ஊரடங்கு நேரத்தில் மட்டும், சோதனை சாவடிக்கு பணிக்கு செல்ல, வாகன வசதி அளிக்கப்படும். தங்கும் அறை உட்பட பிற செலவுகளை பணிக்கு செல்லும் கால்நடை டாக்டர்கள் தான் ஏற்று கொள்ள வேண்டும்,'' என்றார்.