ஊட்டி;கொரோனா தொற்று அதிகரிப்பால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நாள்தோறும், 4 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.இந்நிலையில், மாவட்டத்தில், 50க்கும் குறைவாக இருந்த தொற்று எண்ணிக்கை, கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து, 400ஐ தாண்டியுள்ளது. சுற்றுலா மையங்கள், காலை,10:00 முதல், மாலை, 3:00 மணிவரை மட்டுமே திறக்கப்படுகின்றன. இந்த மாற்றத்தால், நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த இரு நாட்களாக, எண்ணிக்கை, ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,'இனிவரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.