குன்னுார்:தமிழக நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பழது பார்ப்போர் நல சங்க செயற்குழு கூட்டம் ஆன்லைனில் நடந்தது.மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.குன்னுாரில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உட்பட, 14 பேர் உயிரிழந்ததால் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.'தமிழகத்தில் பழுது பார்க்கும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசிடம் வலியுறுத்துவது ; அனைத்து மாவட்ட, நகர் பகுதிகளில் அரசு இடம் ஒதுக்கி வாகன பழுதுபார்க்கும் நகர் அமைக்க வேண்டும்; அனைத்து மோட்டார் தொழில் செய்யும் தொழிலாளர்கள் கிளை சங்கங்களை ஒருங்கிணைத்து மாநில சங்கங்களோடு பதிவு செய்வது,' உட்பட பல்வேறு தீர்மானங்கள் நடத்தப்பட்டன.கூட்டத்தில், மாநில பொது செயலாளர் ஹேன் குமார், பொருளாளர் பார்த்தசாரதி, கவுரவ தலைவர் ஷெரிப், துணை தலைவர் முனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.