கூடலுார்:கூடலுார் நகர சாலையில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், 'டிஜிட்டல் சர்வே' பணி துவக்கப்பட்டுள்ளது.கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை; மேல் கூடலுார்- மாக்கமூலா சாலை வரை, சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், கூடலுார் நகர சாலையில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளது. இதற்கான, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 'டிஜிட்டல்' சர்வே' பணி துவக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில்,'இப்பகுதியில் உள்ள சாலையை விரிவுபடுத்தி, சீரமைக்க, திட்டமிட வசதியாக 'சர்வே' பணிகள் நடந்து வருகிறது. தேவைப்பட்டால், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,' என்றனர். இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.