ஊட்டி:நீலகிரி மாவட்டம் முழுவதும், ஹிந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.'அரியலுார் மாணவி இறப்புக்கு நீதி வேண்டும்; உண்மை குற்றாவளிகளை கைது செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊட்டியில், ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.*குன்னுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கார்த்திக், பா.ஜ மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், ஆர்.எஸ்.எஸ்., கோவை கோட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.*கூடலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் குருசாமி ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் சுரேஷ், ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* பந்தலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஹிந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முரளி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.