தரைப்பாலத்தில் தண்ணீர் போக்குவரத்து பாதிப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
தரைப்பாலத்தில் தண்ணீர் போக்குவரத்து பாதிப்பு
Added : ஜன 24, 2022 | |
Advertisement
 
Latest district News

திருவெற்றியூர் : திருவெற்றியூர் தரைப்பாலத்தில் 3 மாதமாக தேங்கியிருக்கும் தண்ணீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.திருவாடானை அருகே திருவெற்றியூர் செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. திருவெற்றியூர் கண்மாய் வழியாக செல்லும் இந்த பாலத்தில் கடந்த 3 மாதமாக தண்ணீர் தேங்கியுள்ளது.



இது குறித்து திருவெற்றியூர் கவாஸ்கர் கூறியதாவது:திருவெற்றியூர் கண்மாய் நிரம்பியதால் இப் பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆண்டுதோறும் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக இருப்பதால் பெரும் சிரமமாக உள்ளது. நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும் என்று மனு கொடுத்தோம். அந்த மனு ஏற்றுக்கொள்ளபட்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது. காலதாமதம் இல்லாமல்விரைவில் பாலத்தை உயர்த்தி கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X