முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் பள்ளி வளாகத்தில்ஆபத்தான நிலையில் உள்ள ஓட்டு கட்டடத்தால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வந்தது.மாணவர்களின் நலன்கருதி புதிய கட்டடம் கட்டப்பட்டு தற்போது மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான ஓட்டு கட்டடம் சேதமடைந்த நிலையில் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இந்த கட்டடத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்