திருப்பூர்:''நகைக்கடன், கல்விக்கடன் ரத்து; காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; முதியோருக்கு, 1,500 ரூபாய் ஊக்கத்தொகை என, பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளித்திருந்தது. இவற்றை, தமிழக அரசு நிறைவேற்றவில்லை'' எனக் கூறி இதை கண்டித்து, இந்து தேசிய கட்சியினர், வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன், மக்களுக்கு 'அல்வா' கொடுக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையிலான ஏழு பேர், 'அல்வா' பாக்கெட்டுகளுடன் நேற்று, கலெக்டர் அலுவலகம் முன், வாகனத்தில் வந்திறங்கினர்.கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் காத்திருந்த தெற்கு போலீசார், ஏழு பேரையும் கைது செய்தனர். மாலை வரை, கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தங்க வைத்து, பிறகு விடுவிக்கப்பட்டனர்.