திருவாடானை : திருவாடானை தாலுகாவில் உரம் தேக்கமில்லாமல் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.திருவாடானை, சின்னக்கீரமங்கலம், மங்களக்குடி,தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை உள்ளிட்ட பல ஊர்களில் உர வியாபாரிகள் உள்ளனர். ஆண்டுதோறும் மழைபெய்ய தவறுவதால் கொள்முதல் செய்யப்பட்ட உரம் தேக்கமடையும். இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் தேக்கமில்லாமல் உரங்கள் விற்பனையானது.உர வியாபாரிகள் கூறியதாவது:டி.ஏ.பி., யூரியா உரம் வரத்து இல்லாததால் விவசாயிகள் மாற்று உரங்களான காம்ப்ளக்ஸ் உரங்களை போட்டனர். கடந்தாண்டை காட்டிலும்இந்த ஆண்டு இந்த வகை உரங்கள் தேக்கமில்லாமல் விற்பனை ஆனது என்றனர்.