தொண்டி : தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மேலுாரை சேர்ந்த டிரைவர் பாலமுருகன் காயமடைந்தார். பாலமுருகன் புகாரில் துாத்துக்குடி ஆத்துாரை சேர்ந்த லாரி டிரைவர் ஆனந்தசெல்வம் 25, என்பவரை தொண்டி போலீசார் கைதுசெய்தனர்.