ராமநாதபுரம் : மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வலியுறுத்தியும், மதமாற்ற கும்பலை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் தஞ்சை திருக்காட்டுப்பள்ளியிலுள்ள கிறிஸ்தவகல்வி நிறுவனத்தில் பயின்றார்.
பல்வேறு துன்புறுத்தலால் தற்கொலை செய்தார்.இதனை கண்டித்தும், மதமாற்ற கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சக்திவேல், வீரபாண்டியன், பா.ஜ., மாவட்ட தலைவர்முரளிதரன், மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் குமார், நகர் தலைவர் வீரபாகு, மாவட்ட செய்தி தொடர்பாளர் குமரன், பி.எம்.எஸ்., மாவட்ட பொதுச்செயலாளர் பாரதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.