ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, ரூ.12 ஆயிரம் வரை அபராதம் விதித்து உணவுபாதுகாப்புதுறை, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில்,ராமநாதபுரம் உணவுபாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் கொண்ட குழுவினர், நகராட்சி அலுவலர்களுடன் இணைந்து, பஸ் ஸ்டாண்ட், சந்தைகடைப்பகுதி, மதுரை ரோட்டில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன்பொருட்கள், பிளாஸ்டிக்பொருட்கள் வைத்துஇருந்ததை பறிமுதல் செய்து, அதிகப்பட்சமாக ரூ.500 வரை கடைகளுக்குஅபராதம் என ரூ.12ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளனர். மீண்டும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.