ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் மோர்ப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை31, இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த மாயலட்சுமி குடும்பத்தாருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்னையில், மணிமேகலையை, மாகலட்சுமி 37, மாயலெட்சுமியின்கணவர் குமார்கனி 37, இருவரும் தாக்கியுள்ளனர். மாயலட்சுமி, குமார்கனி இருவர் மீதும், திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.