ராமேஸ்வரம் : பாம்பன் மீனவர் வலையில் ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியது.ஜன., 23ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், வழக்கம்போல் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர். அதில் ஒரு படகின் வலையில் 6 அடி அகலத்தில் 30 கிலோவில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது.இது வழக்கமாக மற்ற திருக்கை போல் இல்லாமல், முகம் இரண்டாக பிரிந்து கண்கள் தனித்தனியாக யானை முகம் போல் பெரிய தோற்றத்துடன் உள்ளதால், இதனை ' யானை திருக்கை' என மீனவர்கள் அழைக்கின்றனர்.