பூலாங்குறிச்சி : திருப்புத்துார் ஒன்றியம் பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டி சின்னையா கோவில் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.மஞ்சுவிரட்டில் 16 காளைகள், 144 வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை பிடிக்க 9 வீரர்கள் கொண்ட குழு விளையாடியது. கயிற்றில் கட்டப்பட்ட காளையுடன் விளையாட ஒரு குழுவிற்கு 25 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டது.காளைகளை அடக்கிய குழுவினருக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மாடு முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். முதலுதவி அளிக்கப்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.