கன்னிவாடி : கன்னிவாடியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு தொடர்வதால் வினியோகத்தில் குளறுபடி நீடிக்கிறது.கன்னிவாடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நாயோடை நீர்த்தேக்க பகுதியில் உள்ள உறை கிணறுகளிலிருந்து பல வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது.
வார்டுகள் 1, 2, 3, 4, 5, 14, 15 க்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வினியோகிக்கப்படுகிறது. பேரூராட்சி பகுதியில் பல குடியிருப்புகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் பலரும் மின்மோட்டார் மூலம் குடிநீரை திருடுகின்றனர். இதனை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சக்திவேல் கூறியது: நாயோடை, காவிரி திட்ட வினியோக பகுதியில் மோட்டார் அமைத்து தண்ணீர் திருட்டு தாராளமாக நடக்கிறது. ..இதனால் மற்றவர்களுக்கு வினியோகம் பாதிக்கிறது. சில இடங்களில் ஆழ்துளை மினி குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் ஆதாரம் இருந்தும் பெரும்பாலானவை செயல்பாடின்றி உள்ளன. புகார் அளித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, என்றார்.