திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வித்யா பார்த்தி குரூப் ஆப் ஸ்கூலில் வேர்ல்டு ஜீனியஸ் புக் ஆப் ரெக்கார்ட் அன்ட் அவார்டு நிகழ்ச்சி நடந்தது.தமிழ்நாடு அனைத்து தற்காப்பு கலை சங்க தலைவர் ராஜகோபால் வரவேற்றார். வேர்ல்டு ஜீனியஸ் புக் ஆப் ரெக்கார்ட் அன்ட் அவார்டு தலைவர் கிறிஸ்துராஜ், பள்ளி தாளாளர் கிருஷ்ண மூர்த்தி, லக்ஸர் வேர்ல்டு பள்ளி தாளாளர் சுவாமிநாதன் பங்கேற்றனர். இதில் யோகா, கராத்தே, ஸ்கேட்டிங், சிலம்பம், பாக்ஸிங் போன்ற கலைகளில் மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடந்தது. அனைத்து தற்காப்பு கலை சங்க செயலாளர் ஜாக்கி சங்கர் நன்றி கூறினார்.