திண்டுக்கல் : அரியலுார் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளர் சஞ்சீவி ராஜ் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் ராஜா, மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் பங்கேற்றனர். 'கட்டாய மதமாற்ற கொடுமையால் உயிரிழந்த அரியலுார் மாணவிக்கு நீதி கேட்டு'ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இதனை வீடியோ பிடித்த மாற்று மதத்தை சேர்ந்தவருடன் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.* பழநி மயில் ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் பாலன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் மற்றும் ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர்.* ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், செயலாளர் வேலுச்சாமி, பா.ஜ., மாவட்ட நிர்வாகி ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.* வடமதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர். 'அரியலுார் மாணவி இறப்பிற்கு நீதி விசாரணை வேண்டும். மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்'என, வலியுறுத்தினர்.* ஒட்டன்சத்திரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட பார்வையாளர் பழனிச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.