பல்லடம்:தஞ்சை அருகே உயிரிழந்த மாணவி லாவண்யாவின் இழப்புக்கு நீதி கேட்டு, திருப்பூர் மாநகர மாவட்டம் சார்பில், 15 இடங்களில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., கோட்ட பொறியாளர் கணேசன் பேசுகையில், ''கட்டாய மத மாற்றத்தின் காரணமாகவே மாணவி உயிரிழந்துள்ளார். லாவண்யா, ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.லாவண்யாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். ஒன்றிய தலைவர் சர்வேஸ்வரன் பங்கேற்றார்.திருப்பூர் குமரன் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.திருப்பூர் ஆண்டிபாளையத்தில், மாநில செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் மாநில செயலாளர் சேவுகன், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல்; தென்னம்பாளையத்தில், கோட்ட செயலாளர் கிருஷ்ணன்; தண்ணீர்பந்தலில், மாநில செயலாளர் சண்முகம்; வீரபாண்டியில், துணை தலைவர் செந்தில்; கோவில் வழி பஸ் ஸ்டாண்டில், மாவட்ட தலைவர் அண்ணாதுரை, ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் வாசன்; ராக்கியாபாளையம் பிரிவு மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், பாளையக்காடு பஸ் ஸ்டாப்பில், கோட்ட செயலாளர் மோகன்; அனுப்பர்பாளையம் பஸ் ஸ்டாப்பில், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், அவிநாசியில் மாநகர மாவட்ட செயலாளர் கேசவன், மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து மற்றும் பெருமாநல்லுாரில் மாவட்ட துணை தலைவர் சேகர், வாசுநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.