தாயின் மணிக்கொடி பாரீர்... அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்: குடியரசு தினம் கொண்டாட தேசிய கொடி வாங்கிட்டீங்கதானே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
01:19

திருப்பூர்:நாளை குடியரசு தின விழாவையொட்டி, திருப்பூரில் தேசிய கொடிகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.நாளை(26ம் தேதி) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் என பல இடங்களிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றப்படும்; இதற்காக கடைகளில் பல வகைகளில் தேசிய கொடி உள்ளிட்டவை விற்பனையாகும்.தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால், பெருமளவு கொடி விற்பனை அதிகரிக்கவில்லை என்கின்றனர் வர்த்தகர்கள்.இருப்பினும் தனி நபர்கள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் குடியரசு தின கொண்டாட்டத்துக்கு இதன் விற்பனை ஓரளவு இருந்தது.பிளாஸ்டிக் கொடிகள் முன்பு அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இவை விற்கப்படுவதில்லை. திருப்பூரில், தற்போது, காகிதம் மற்றும் துணிகளாலான தேசியக்கொடிகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.கதர் துணியில் செய்த ஒரு அடி முதல் 3 அடி அளவிலான தேசிய கொடி விலை, 15 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.தோரணங்கள் அமைக்கும் வகையிலான காகித கொடிகள் 3 அளவுகளில், 100 எண்ணிக்கை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது.இது தவிர கைகளில் அணிந்து கொள்ளும் 'பேண்ட்' 15 ரூபாய்க்கும்; சட்டையில் அணிந்து கொள்ளும் ஸ்டிக்கர் கொடிகள், மெட்டல் கொடிகள் ஆகியன 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது. வாகனங்கள், டேபிள்களில் பொருத்தும் வகையில் குச்சியுடன் அமைந்த கெட்டியான காகித கொடிகள் 15 ரூபாய்க்கு விற்பனையானது.திருப்பூரை சேர்ந்த விற்பனையாளர்கள் கூறுகையில், 'கல்வி நிறுவனங்கள் இயங்காத நிலையில் விற்பனை சற்று குறைவாக உள்ளது. இருப்பினும் திருப்பூரில் உள்ள அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் குடியரசு தின கொடியேற்ற நிகழ்வு நடத்துவர். அவ்வகையில் இதன் விற்பனை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X