எரியோடு : எரியோடு பசும்பொன் நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் முத்துக்குமார் 33. முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் 2வது திருமணம் செய்தார். பெற்றோர் இல்லாத நிலையில் உறவினரின் நகைக் கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு எரியோடு மறவபட்டி பகுதியில் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.