சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் வனப்பகுதியை பாதுகாக்க உருவாக்கப்பட்ட வனக்குழு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி கடன் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு வனவர் பிரகாஷ் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பூமிநாதன், துணைச் செயலாளர் சிவபுரி சேகர் முன்னிலை வகித்தனர். வனக்குழுத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். 30 உறுப்பினர்களை கொண்ட 2 சுய உதவி குழுக்களுக்கு 3 லட்ச ரூபாய் சுழல்நிதிக் கடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனக்காப்பாளர், வன பாதுகாப்பு அலுவலர் பங்கேற்றனர்.