உடுமலை:உடுமலை கோட்ட மின் வாரியம், தளி இளமின் பொறியாளர் அலுவலகத்திற்குட்பட்ட, திருமூர்த்திநகர் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால், 2022 ஜன., மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.எனவே, மேற்கண்ட மின் நுகர்வோர், நவ., 21 மாதத்தில் செலுத்திய மின் கட்டண தொகையையே, ஜன., மாதத்திற்கான மின் கட்டணத்தொகையாக செலுத்த வேண்டும், என உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.