உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்துக்காக, சித்தி, புத்தி விநாயகர் கோவிலில் இருந்து, சீர்வரிசை கொண்டு செல்லும் வைபவம் நடந்தது.உடுமலையில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், வரும், 27ம் தேதி நடக்கிறது. இதற்காக கோவிலில், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நேற்று குட்டைத்திடல், சித்தி, புத்தி விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு செல்லும் வைபவம் நடந்தது.இக்கோவிலில் இருந்து பக்த பெரியோர்கள், ஊர்வலமாகச்சென்று, மாரியம்மன் கோவிலில், சீர்தட்டுகளை சமர்ப்பித்தனர்.