கான்ட்ராக்டர்களுக்கு ரூ.10 கோடிக்கு நிலுவையால் பரிதவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
04:07


ஆண்டிபட்டி : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.10 கோடிக்கு ஒப்பந்த பணி முடித்து 5 மாதமாகியும் அரசு கான்ட்ராக்டர்களுக்கு பணம் வழங்காதாதல் பரிதவிக்கின்றனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஊராட்சிகளில் பள்ளி கட்டடம், அங்கன்வாடி கட்டுதல், சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் பதித்தல் பணிகள் கான்ட்ராக்டர்கள் மூலம் செய்து முடிக்கப்பட்டுள்ளன.



ஊராட்சிகளில் கான்ட்ராக்டர்கள் சொந்த பணத்தை செலவு செய்து பணி முடித்துள்ளனர். முடிந்த பணிகளுக்கான உறுதிச் சான்று அதிகாரிகள் மூலம் அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து பல மாதம் ஆகியும் பணம் வழங்காததால் கான்ட்ராக்டர்கள் பரிதவிக்கின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு ரூ.2 கோடி நிலுவைத் தொகை உள்ளது. அரசு எப்போது பணம் வழங்கும் என ஒன்றிய அலுவலகத்தில் தினமும் காத்திருக்கின்றனர்.5 மாதங்களாக காத்திருப்பு:கான்ட்ராக்டர்கள் கூறியதாவது: ஒப்பந்த அடிப்படையில் அரசு மூலம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகளை அரசு விதிகளுக்கு உட்பட்டு முடித்து அதன் விபரங்கள் ஆன்லைனில் 'அப்டேட்' செய்து பல மாதம் ஆகிறது.

கடந்த காலங்களில் முடித்த பணிகளுக்கு ஒரு சில வாரங்களில் பணம் கிடைத்தது. 5மாதங்களாக முடித்த பணிகளுக்கு பணம் வழங்கவில்லை.மாவட்டம் முழுவதும் 8 ஒன்றியங்களில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு ரூ.10 கோடி வரை நிலுவை உள்ளது. அரசு நிதி வழங்காததால் தொடர்ந்து மற்ற பணிகளை தொடர முடியவில்லை. இதனால் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. முடிந்த பணிகளுக்கான பணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X