கம்பம், : உத்தமபாளையத்திலிருந்து ராமசாமி நாயக்கன்பட்டி செல்லும் ரோடு குறிப்பாக தாமரைக்குளம் கரை ரோடுகள் மோசமாக உள்ளது. பரமத்தேவன் பட்டியலிலிருந்து முத்துலாபுரம் செல்லும் ரோடும் மோசமாக உள்ளது.
கம்பத்திலிருந்து ஆங்கூர் பாளையம் செல்லும் ரோடு உள்ளிட்ட பல ரோடுகள் மோசமான நிலையில் உள்ளன. சில ஆண்டுகளாக நகரங்களை இணைக்கும் ரோடுகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் ரோடுகளை பராமரிக்க வேண்டும்,