மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் மின்வாரியம் சார்பிலான ஹைடல் டூரிசத்தின் செயல்பாடுகளை அத்துறை இயக்குனர் நரேந்திரநாத் வெல்லூரி தலைமையில் அதிகாரிகள் இடுக்கி, செருதோணி அணைகள் மற்றும் நாடுகாணி, வைஷாலி குகை ஆகியவற்றை ஆய்வு நடத்தினர்.அணையின் நுழைவு பகுதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் அர்ஜூன்பாண்டியன், ஹைடல் டூரிசம் பொறுப்பாளர் ஜோமி உள்பட பலர் பங்கேற்றனர்.