தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகினர்.நேற்று மாவட்டத்தில் 381 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 125 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 2 பேர் டாக்டர்கள். மாவட்டத்தில் நோய் உறுதி செய்யும் சதவீதம் 32.80 ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் கொரோனாவால் 2 பேர் பலியாகினர். இதன்மூலம் கொரோனா 3ம் அலை பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.