புதுச்சேரி-வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.வம்பாகீரப்பாளையம் மீனவர்கள், மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள சுரங்கப்பாதை பகுதியில் மின் விளக்கு, தண்ணீர், தார் சாலை, வலைக்கூடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி மீன் வளத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று வம்பா கீரப்பாளையம் மீனவர்கள், தேங்காய்த்திட்டு பகுதியில் உள்ள மீன்வளத் துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை இட்டனர். அப்போது, புதிதாக உருவாகி உள்ள பாண்டி மெரினா பீச் பகுதியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டு கூறினர்.பின்னர், இணை இயக்குனர் தெய்வசிகாமணியை சந்தித்து மனு அளித்தனர்.