புதுச்சேரி-மண்ணாடிப்பட்டு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், நுாறு நாள் வேலை திட்டம் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளது.அதையொட்டி, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி முகமை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன், அமைச்சர் நமச்சிவாயம் நேற்று சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் துவங்கப்படவுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை வழங்கினார்.