புதுச்சேரி-அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில், ராஜா தியேட்டர் சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் சாம்ராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுதர்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அரியலுார் மாவட்ட மாணவி லாவண்யாவை மத மாற்ற துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி, கல்லுாரிகளில் நடைபெறும் மதமாற்றத்தை தடுக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், மதமாற்ற முயற்சியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.