புதுச்சேரி-மருத்துவ படிப்பிற்கான புதுச்சேரி பட்டியலில், ஏனாம் மாணவர்கள் 44 பேரை சேர்க்க கோரி, மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு, சுகாதாரத் துறை இயக்குநர் கடிதம் எழுதி உள்ளார்.புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் ஸ்ரீராமுலு, மத்திய மருத்துவ கவுன்சில் குழு உறுப்பினர் செயலர் ஸ்ரீநிவாசுக்கு அனுப்பியுள்ள கடிதம்:புதுச்சேரி யூனியன் பிரதேசமான ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 44 மாணவர்கள் பெயர், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வுக்கு, புதுச்சேரி இடஒதுக்கீட்டு பட்டியலில் விடுபட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.இந்த மாணவர்களின் பெயர்களை ஆய்வு செய்ததில், இவர்களது பெயர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில பட்டியலில் இல்லை. இவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 படித்து, நீட் தேர்வு எழுதியுள்ளனர்.இருந்தும் இம்மாணவர்கள் பெயர், புதுச்சேரி இடஒதுக்கீடு பட்டியலில் விடுப்பட்டுள்ளது. எனவே, இவர்களை மத்திய மருத்துவ கவுன்சில் போர்டலில் புதுச்சேரி இடஒதுக்கீடு பட்டியலில் இணைப்பதுடன், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.