உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே சாலை பணிக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் மொபட் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் இறந்தார்.செங்கல்பட்டு மாவட்டம், திருத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தாஸ், 57; மின்வாரிய ஊழியர். இவர், உளுந்துார்பேட்டை பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் சாலையில் சென்றபோது, தரைப் பாலம் கட்டுமானத்திற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் மொபட் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தாஸ் இறந்தார்.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.