விழுப்புரம்-குடியரசு தினவிழாவை முன்னிட்டு விழுப்புரம் பஸ் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடி குண்டு சோதனையில் ஈடுபட்டனர்.இந்தியாவின் 73வது குடியரசு தின விழா நாளை 26ம் நடக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், முருகன் தலைமையிலான போலீசார் மோப்ப நாய் ராணி உதவியுடன் பயணிகளின் உடமைகள் மற்றும் பஸ்களில் சோதனை மேற்கொண்டனர்.