விழுப்புரம்-குடியரசு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் மைதானத்தில் நாளை 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று கலெக்டர் தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவி வழங்க உள்ளார். அதனையொட்டி, நேற்று காலை விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில், போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.