திண்டிவனம்-திண்டிவனம் அடுத்த கர்ணாவூரில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடந்தது.மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா, ஊராட்சித் தலைவர் சரவணன் தலைமை தாங்கினர். சமூக நல மகளிர் பாதுகாப்பு நல அலுவலர் முத்தமிழ்ஷீலா, மைய நிர்வாக அலுவலர் பத்மாவதி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்கள் விழுப்புரம் ஜோசப் அலெக்ஸ், திண்டிவனம் லட்சுமிபதி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தை திருமணம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தை திருமணம் குறித்த உறுதி மொழியேற்கப்பட்டது.நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் பிரகாஷ், பள்ளி தலைமையாசிரியை தில்ஷாத்பேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.திருவெண்ணெய்நல்லுார்அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் முருகன், வாசுகி, பிரேமலதா முன்னிலை வகித்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர்கள் குருபரன், சுரேஷ்குமார் ஆகியோர் பெண் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வுகள் பாதுகாப்பு குறித்து பேசினர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.