செஞ்சி-செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா குழுவினர் நேற்று செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடை பயணம் துவக்கினர்.செஞ்சியில் மார்கழி மாதம் மாலை அணிந்து விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் 22ம் ஆண்டாக நேற்று திருப்பதிக்கு பாத யாத்திரை புறப்பட்டனர்.முன்னதாக செஞ்சி, சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பாத யாத்திரை குழுவினருக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து வழியனுப்பினார். இக்குழுவினர் வரும் 29ம் தேதி இரவு மேல் திருப்பதி சென்றடைகின்றனர்.