காசிமேடு--சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 150 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
இதனால், இங்குள்ள மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அரசுக்கும் வருமானம் பெருகும். இவ்வாறு அவர் கூறினார். சிறப்பம்சங்கள் என்ன? காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தற்போது, ௫௦௦ படகுகள் கட்டுவதற்கான வார்ப்பு தளம் உள்ளது. ஆனால், இங்கு ௨,௦௦௦த்திற்கும் மேற்பட்ட படகுகள் உள்ளதால், இடநெருக்கடியில் படகுகள் கட்டப்படுகின்றன. இதனால், புயல், கன மழையின் போது, படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன; கடலில் மூழ்கிவிடுகின்றன.சமீபத்திய பருவமழையில் மட்டும் 91 விசைப் படகுகள் சேதம் அடைந்தன. இதற்கு நிவாரண தொகையாக, அரசு சார்பில் ௫.௬௬ கோடி ரூபாய் வழங்கப்பட்டது.இந்நிலையில், மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாகூரார் தோட்டம் பகுதியில், 400 படகுகள் நிறுத்தும் அளவில், மெயின் வார்ப்பு தளம் மற்றும் படகு அணையும் தளம் அமைக்கப்பட உள்ளது. இது தவிர, 100 நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்த, படகு அணையும் தளமும் அமைக்கப்பட உள்ளது. மீன்பிடி துறைமுகத்தில், சமூக விரோதிகள் நடமாட்டம் மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க, அப்பகுதி முழுவதிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இரவு நேரத்தில் மீன் விற்பனை செய்யும் இடங்களில், ராட்சத ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. பழைய காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையம் முதல், காசிமேடு துறைமுகம் ஜீரோ கேட் வரை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.
மீனவர்களுக்கு மீன் 'ஷெட்டு'கள், மீன் வலை பழுதுபார்க்கும் கூடங்கள், விசைப்படகு பழுதுபார்க்கும் கூடங்கள், மீனவர்களுக்கான ஓய்வறைகள் உருவாக்கப்பட உள்ளன. நாகூரார் தோட்டம் புதிய வார்ப்பு தளம் துவங்கி பழைய மீன் விற்பனை தளம் வரை உள்ள, 6 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட உள்ளது. மீன் உலர்த்தும் தளம், மீன் பதபடுத்தப்படும் நிலையம் அமைக்கப்பட உள்ளது.