முககவசம் இல்லையா? ரூ.500 அபராதம் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
06:29

சென்னை -சென்னையில், முககவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் முதல், 500 ரூபாயாக அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியது.



வாய், மூக்கு வரை முழுமையாக முககவசம் அணியாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், மக்கள் முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவது தொடர்கிறது.எனவே, அனைவரையும் முககவசம் அணிய வைக்கவும், கொரோனா பரவும் வேகத்தை குறைக்கவும், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், இனி முககவசம் அணியாதோருக்கு, 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, தெரிவித்திருந்தது.

சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், ஏற்கனவே, 200 ரூபாய் அபராதத்திற்கான ரசீது இருந்ததால், அவற்றை மாற்றி, 500 ரூபாய்க்கான ரசீதாக அச்சிட, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.அந்த ரசீது அச்சிடப்பட்டு தயாராக உள்ளதால், முககவசம் அணியாதோருக்கு, இன்று முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், முககவசம் அணியாதோரிடம் இருந்து, கடந்த டிச., 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 70.23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.முககவசம் அணியாதோருக்க 500 ரூபாய் அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், ௨௦௦ ரூபாய் அபராத ரசீதுகள் மட்டுமே இருந்ததால், இந்த ரசீதை வழங்கி, 500 ரூபாய் வசூலித்தால் குழப்பம் ஏற்படும். எனவே, ௫௦௦ ரூபாய்க்கான ரசீது புதிதாக அச்சிடப்பட்டது. அவை, அச்சிடப்பட்டு வந்துள்ளதால், இன்று முதல் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், முககவசம் அணியாதோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இவற்றை மேலும் குறைக்க, பொதுமக்கள் அனைவரும், முககவசத்தை, வாய், மூக்கை மூடியப்படி முழுவதுமாக அணிய வேண்டும். அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.சென்னை, ஜன. ௨௫ -

சென்னையில், முககவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் முதல், 500 ரூபாயாக அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியது. வாய், மூக்கு வரை முழுமையாக முக கவசம் அணியாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவது தொடர்கிறது.எனவே, அனைவரையும் முக கவசம் அணிய வைக்கவும், கொரோனா பரவும் வேகத்தை குறைக்கவும், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், இனி முககவசம் அணியாதோருக்கு, 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, தெரிவித்திருந்தது.சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், ஏற்கனவே, 200 ரூபாய் அபராதத்திற்கான ரசீது இருந்ததால், அவற்றை மாற்றி, 500 ரூபாய்க்கான ரசீதாக அச்சிட, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.அந்த ரசீது அச்சிடப்பட்டு தயாராக உள்ளதால், முக கவசம் அணியாதோருக்கு, இன்று முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், முக கவசம் அணியாதோரிடம் இருந்து, கடந்த டிச., 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 70.23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.முக கவசம் அணியாதோருக்க 500 ரூபாய் அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், ௨௦௦ ரூபாய் அபராத ரசீதுகள் மட்டுமே இருந்ததால், இந்த ரசீதை வழங்கி, 500 ரூபாய் வசூலித்தால் குழப்பம் ஏற்படும். எனவே, ௫௦௦ ரூபாய்க்கான ரசீது புதிதாக அச்சிடப்பட்டது. அவை, அச்சிடப்பட்டு வந்துள்ளதால், இன்று முதல் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், முககவசம் அணியாதோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. இவற்றை மேலும் குறைக்க, மக்கள் அனைவரும், முக கவசத்தை, வாய், மூக்கை மூடியப்படி முழுவதுமாக அணிய வேண்டும். அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X