செங்குன்றம்--வடமாநில வாலிபரை வெட்டி, வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.செங்குன்றம், தண்டல்கழனியில், குடிநீர் கேன் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதில், வடமாநிலத்தைச் சேர்ந்த சம்சுதீன், 20, என்பவர் பணி புரிகிறார்.கடந்த 22ம் தேதி இரவு, ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்ற சம்சுதீனை, ஜி.என்.டி., சாலை சந்திப்பில், டூ - வீலரில் வந்த மூவர், வழி மறித்து வெட்டி, மொபைல் போனை பறித்து சென்றனர்.இது குறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காந்தி நகர், ஆலமரம் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, டூ - வீலரில் சந்தேகத்திற்கிடமாக வந்த மொண்டியம்மன் நகரை சேர்ந்த யுவனேஸ்வரன், 20, பாடியநல்லுாரைச் சேர்ந்த ராகுல், 26, சோழவரத்தைச் சேர்ந்த தினேஷ், 22, ஆகியோரை விசாரித்தனர்.இதில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மொபைல் போன், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.