ஆவடி-ஊரடங்கு விதிமீறிய 401 வாகனங்களை, ஆவடி மாநகர போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லையில், நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமலில் இருந்த போது, 1,746 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதில், ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டங்களில், 109 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு செய்யப்பட்டது.இதில், விதிமீறிய 379 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள், 4 கார்கள் உட்பட ௪௦௧ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முக கவசம் அணியாத 69 பேரிடம், 13 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.