பெசன்ட் நகரில் இருந்து அடையாறு செல்லும் பெசன்ட் அவென்யூ சாலை போக்குவரத்து நிறைந்தது. இச்சாலையில், மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அச்சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளதால், தினசரி அதிகாலையில் சுகாதாரமான காற்றை சுவாசிக்க ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.அவர்கள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட பகுதிகளில் செடி, கொடி படர்ந்து உள்ளதால் நடைபாதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.நடைபயிற்சி மேற்கொள்வோர் சாலையில் நடந்து செல்வதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடைபாதையை முறையாக சீரமைக்க வேண்டும்.