அடையாறு மண்டலம் 180வது வார்டு, பெருங்குடி ரயில் நிலையம் செல்லும் சாலையில், வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாடுகள், இந்த சாலையில் உலா வருகின்றன. இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர். இரு தினங்களுக்குமுன், மாடு திடீரென குறுக்கே சென்றதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாடுகளை உலாவிடும் மாட்டு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, சாலை விபத்து அசம்பாவிதங்களை தடுக்க, அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துஉள்ளது.