தாம்பரம்--குடியரசு தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகராட்சியில் உள்ள, 50 பூங்காக்களை சுகாதாரத் துறையினர் சுத்தம் செய்தனர்.தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள், கொரோனா தொற்று காரணமாக மூடி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்ற வசதியாக, அனைத்து பூங்காக்களையும் சுத்தம் செய்ய மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, மாநகராட்சி சுகாதாரத் துறையினர், மாடம்பாக்கத்தில், 5; பல்லாவரத்தில்,- 18; தாம்பரத்தில்-, 8; திருநீர்மலை-யில், 2; அனகாபுத்துாரில்,- 2; செம்பாக்கத்தில்,- 4; பெருங்களத்துாரில்,- 5; பம்மலில்,- 3; சிட்லப்பாக்கத்தில்,- 2; பீர்க்கன்காரணையில் ஒன்று- என, மொத்தம், 50 பூங்காக்களை, நேற்று சுத்தம் செய்தனர்.