கன்டெய்னர் தட்டுப்பாட்டால் ஆடை அனுப்புவதில் சிக்கல்: ஏற்றுமதியாளர்கள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஜன
2022
09:52
பதிவு செய்த நாள்
ஜன 25,2022 09:44

திருப்பூர்: 'அடுத்த ஐந்து மாதங்களுக்கு கப்பல் கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கட்டண உயர்வு நீடிக்கும்' என்பதால், திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டு வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கின்றன. உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், சரக்கு பெட்டகங்களில் (கன்டெய்னர்) வைத்து, கப்பலில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.



கொரோனாவுக்குப்பின், உலகளாவிய நாடுகளின் துறைமுகங்களில், சரக்கு கையாள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கன்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சரக்கு கப்பல் போக்குவரத்து கட்டணமும் உயர்ந்து காணப்படுகிறது.
உற்பத்தி செய்த ஆடைகளை கப்பலில் அனுப்ப போதிய கன்டெய்னர் கிடைக்காதது; குறித்த காலத்துக்குள் வர்த்தகருக்கு ஆடைகளை அனுப்பி வைக்க முடியாமை; போக்குவரத்து செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் பரிதவித்துவருகின்றன.

கொரோனா அலை மீண்டும் வீசத்துவங்கியுள்ளதால், கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கட்டணங்கள் இந்தாண்டும் தொடரும் நிலையே உருவாகியுள்ளது.திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:



கொரோனாவுக்குப் பின், கன்டெய்னர் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு கப்பலில் ஆடைகளை அனுப்புவதற்கான செலவுகள் அதிகரித்துள்ளது.கன்டெய்னர் தட்டுப்பாடால், தயாரித்த ஆடைகளை குறித்த காலத்துக்குள் அனுப்பிவைக்கவும் முடிவதில்லை. நடப்பு ஆண்டு கன்டெய்னர் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

உலக நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத்துவங்கியுள்ளது. துறைமுகங்களில், தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. அமெரிக்கா, அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்கிறது. அந்நாட்டின் கலிபோர்னியா மாகாண துறைமுக பகுதியில், 80க்கும் மேற்பட்ட கப்பல்கள், சரக்குடன் காத்திருக்கின்றன.சீன புத்தாண்டு நெருங்குகிறது.

அந்நாட்டினர் 15 நாட்களுக்கு மேல் விடுமுறையில் சென்றுவிடுவர். அதனால், சீனா வசம் உள்ள கன்டெய்னர்கள் திரும்புவதில் காலதாமதம் ஏற்படும். எனவே, நடப்பு ஆண்டும், கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கட்டண உயர்வு நீடிக்கும் நிலையை உள்ளது. வரும் ஜூன் மாதத்துக்கு பின், தேக்க நிலைகள் விலகி, கன்டெய்னர் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.



நுால் உட்பட அனைத்து மூலப்பொருட்கள், ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், கன்டெய்னர் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினருக்கு நெருக்கடி கொடுக்கிறது.ஏற்றுமதியாளர்கள், குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து, கப்பலில் அனுப்பிவைத்துவிடவேண்டும்.

காலதாமதம் ஏற்பட்டால், விமானங்களில் அனுப்ப நேரிடும்; இது, செலவை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஏற்றுமதியாளர்கள், குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து, கப்பலில் அனுப்பிவைத்துவிடவேண்டும். காலதாமதம் ஏற்பட்டால், விமானங்களில் அனுப்ப நேரிடும்; இது, செலவை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
25-ஜன-202214:49:24 IST Report Abuse
J.Isaac அதானி குழுமத்திற்கு யோகம் தான்
Rate this:
venkates - ngr,இந்தியா
25-ஜன-202218:25:27 IST Report Abuse
venkatesஅடிப்படை வசதி இல்லை 1 ஆதனை அல்லது நீங்க செய்யணும்11...
Rate this:
RAMESH - chennai,இந்தியா
25-ஜன-202219:12:45 IST Report Abuse
RAMESHஐசாக் ..தலைப்பை சரியாக படியுங்கள். CONTAINER தயாரிப்பில் அதானி குழுமம் இறங்கவில்லை. CONTAINER பற்றாக்குறை. இதை சரி செய்ய நமது உள்நாட்டு தயாரிப்பை அதிக படுத்த வேண்டும். BALMER LAWRIE நிறுவனம் (EPZ) சிறுது காலம் தயாரிப்பில் இருந்தது. தற்சமயம் இல்லை. அதேபோல் CARGO CONTAINER SHIPS பெரும்பாலும் அயல்நாட்டை சார்ந்தது . FREIGHT அவர்களுக்கு TAX இல்லாமல் (RBI வரி விலக்கு அளித்திருக்கிறது) REMITTANCE செய்யப்படுகிறது. எதிர் காலத்தில் நாம் மற்ற நாடுகளை நம்பாமல் நாமே சரக்கு கப்பல்களை நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்க வேண்டும். ஒரு சில இந்திய கம்பெனிகள் மட்டும் சரக்கு கப்பல்களை ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு இயக்குகின்றார்கள். வெளி நாடுகளில் நமது நாட்டு பொருள்களுக்கு நல்ல தேவை இருக்கிறது. Ministry of Shipping இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு நமது நடப்பு மற்றும் எதிர்கால தேவைக்காக ஆவண செய்ய வேண்டும்....
Rate this:
Cancel
Sivanandham - Thanjai,இந்தியா
25-ஜன-202214:23:56 IST Report Abuse
Sivanandham கண்டைனர் பண விவகாரம் ஜெயாவின் மற்றொரு சாதனை. அதைத்தான் பீனிக்ஸ் என்று அடிமைகள் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுகிறானுங்க...
Rate this:
Cancel
Sivanandham - Thanjai,இந்தியா
25-ஜன-202214:22:51 IST Report Abuse
Sivanandham கரூர் அன்புநாதன் வைத்திருந்த அந்த கண்டைனர் பணம் பிடிக்கப்பட்டபோது ஒரு வாரம் யாருமே கேட்பாரில்லாமல் இருந்து வடக்கே உள்ள கும்பல் போலியாக ஆவணங்கள் தயார் செய்து அப்படியே கொண்டுபோய்ட்டானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X