உச்சம் நோக்கி பஞ்சு விலை... கேண்டி ரூ.81 ஆயிரத்தை தொட்டது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஜன
2022
10:35
பதிவு செய்த நாள்
ஜன 25,2022 10:33

திருப்பூர்: பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது; தற்போது, கேண்டி 81 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது.

தமிழக நுாற்பாலைகள், குஜராத், தெலுங்கானா உள்பட வெளிமாநிலங்களில் பஞ்சு கொள்முதல் செய்து, அனைத்து நுால் ரகங்களையும் தயாரிக்கின்றன. முன் எப்போதும் இல்லாதவகையில், நடப்பு சீசனில், பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 15 மாதங்களில், கிலோவுக்கு 100 ரூபாய் ஒசைரி நுால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆடை தயாரிப்பு செலவு அதிகரிப்பு, வர்த்தகரிடமிருந்து புதிய ஆர்டர்களை பெறமுடியாமை, நடைமுறை மூலதன தேவை அதிகரிப்பு என, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

யூக வணிகமே பஞ்சு விலை உயர்வுக்கு காரணம் என, ஜவுளித்துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர். நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும்; இறக்குமதி பஞ்சுக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொங்கலுக்கு முன்புவரை, கேண்டி(355.62 கிலோ) 76 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு விலை, தற்போது 81 ஆயிரத்தை தொட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரையும் கதிகலங்கச் செய்துள்ளது. பஞ்சு விலை அதிகரிப்பால், நுால் விலை குறைய வாய்ப்பில்லை. மாறாக, வரும் பிப்., 1ல், நுால் விலை மேலும் உயர்ந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
25-ஜன-202212:27:48 IST Report Abuse
தத்வமசி விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி அவற்றை வாபஸ் வாங்க வைத்தாயிற்று. இப்போது பொங்கினால் என்ன செய்வது. பதுக்கலை தடுக்க வேண்டும். ஒரு சாரார் மட்டுமே எதிர்த்து போராடிய போது, அதனால் பயன் பெற்றவர்கள் ஏன் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை ? ஏன் விவசாய சட்டங்களை பற்றி பேசவில்லை ? அப்போது சுயநலம் மட்டுமே சிந்தித்தது. இப்போது பதுக்கல், விலை உயர்வு என்று அனைத்தையும் கண்டு சத்தம் போட்டு என்ன பயன் ? இடைத்தரகர்கள் இருக்கும் வரை ஒன்றும் செய்ய இயலாது.
Rate this:
Cancel
I LOVE MY INDIA - CHENNAI,இந்தியா
25-ஜன-202211:07:30 IST Report Abuse
I LOVE MY INDIA விவசாயிகளுக்கு இப்போது தான் நியாயமான விலை கிடைத்திருக்கிறது. இது தொடர்ந்து கிடைக்க அந்த கடவுள் துணை புரிய வேண்டும் .
Rate this:
Senthil kumar - coimbatore,இந்தியா
25-ஜன-202217:40:39 IST Report Abuse
Senthil kumarவிவசாயிகளை விட இடைத்தரகர் காட்டில்தான் அடை மழை கொடுக்கிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பஞ்சு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X