மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே டூவீலர்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில், நண்பருடன் கல்லூரி மாணவர் பலியானார். ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அருகே, 60 வேலம்பாளையம், அன்னை இந்திரா நகரை சேர்ந்த பெருமாள் மகன் நவீன்குமார், 19; கல்லூரி மாணவன். அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன்கள் கார்த்திக் பிரபு, 26, வெள்ளைச்சாமி, 23; இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள் மூவரும் அப்பாச்சி பைக்கில், மொடக்குறிச்சிக்கு நேற்றிரவு, 8:00 மணிக்கு சென்றனர். அய்யகவுண்டம்பாளையம் அருகே லாரியை முந்த முயன்றபோது, சிவகிரி நோக்கி எதிரே யுனிகான் பைக்கில் ஜெகதீஷ், 24, வந்தார். இரு பைக்குகளும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் நவீன்குமார், கார்த்திக் பிரபு சம்பவ இடத்தில் பலியாகினர். மற்ற இருவரும் காயமடைந்தனர். மொடக்குறிச்சி போலீசார் இருவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.