சென்னை : 'டாஸ்மாக்' கடையில் கைவரிசை காட்டியவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் கூட்டாளியுடன் சேர்ந்து, கோவில் உண்டியல் திருடியதும் அம்பலமானது.ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோவில் தெருவில் 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது. அதன் ஊழியர்கள், நேற்று முன்தினம் கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, மது பாட்டில்கள் திருடப்பட்டிருந்தன.இது குறித்து, குமரன் நகர் போலீசார் விசாரித்தனர்.இதில், கே.கே., நகர், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பிரகாஷ், 22, நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 110 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராஜேஷ், விக்னேஷ், வசந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.மற்றொரு சம்பவம்எம்.ஜி.ஆர்., நகரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. கோவில் செயலர் ஜெகதீசன் என்பவர், 23ம் தேதி காலை கோவிலுக்கு சென்றபோது, உண்டியலை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.எம்.ஜி.ஆர்., நகர் போலீசாரின் விசாரணையில், கே.கே., நகர், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சஞ்சய், 19, மற்றும் பிரகாஷ், 2௨, ஆகியோர் திருடியது தெரிய வந்துது.சஞ்சயை, போலீசார் நேற்று கைது செய்து, 10 ஆயிரத்து, 400 ரூபாயை பறிமுதல் செய்தனர். பிரகாஷ், குமரன் நகர் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.